ஊடக அறிவித்தல்     

தேர்தல் ஆணைக்குழு சனநாயகம் தொடர்பாக சமூகக் கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்காக களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து சனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக “பௌர” (Stories Of Democracy) என்ற பெயரில் குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்மை தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக செயலக மாநாட்டு மண்டபத்தில் 26-02-2019   நடைபெற்றது .இக்கலந்துரையாடலில் மஹுந்த தேசப்பிரிய, (தவிசாளர்,தேர்தல் ஆணைக் குழு), எம்.எம்.மொகமட்(ஆணையாளர் நாயகம்),எம்.கே.சமன் .ஶ்ரீ ரட்நாயக்க (மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்),எஸ்.அச்சுதன் (பிரதி தேர்தல்கள்  ஆணையாளர்),த.அகிலன் (பிரதி தேர்தல்கள் ஆணையாளர்,யாழ்ப்பாணம்), சுரங்க ரணசிங்க (உதவி தேர்தல்கள்  ஆணையாளர்),சன்ன .பி.டி.சில்வா (பணிப்பாளர்,ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல்). ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடக அறிவித்தல்     

தேர்தல் ஆணைக்குழு 2017-2020 மூலோபாயத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சனநாயகம் தொடர்பாக சமூகக் கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்காக களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து சனநாயகம் மக்கள் தொடர்பாடல்    பிரிவு மற்றும்  கல்வி அமைச்சு ஆகியன இணைந்து சனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக “பௌர” (Stories Of Democracy) என்ற பெயரில் குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

குறுந்திரைப்பட விழாவின் நோக்கங்கள்

 • சனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பாக பொதுமக்களிடத்தில் புரிந்துணர்வை மேம்படுத்தல் மற்றும் அது தொடர்பான கருத்தாடலொன்றை ஏற்படுத்தல்.
 • கலைத்துறையின் வல்லுநர்கள், இளம் படைப்பாளிகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கல்வியியலாளர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் ஆகியோரை இக்கருத்திட்டத்தனுடாக தேர்தல் ஆணைக்குழுவின் பங்குதார தரப்புக்களாக இணைத்துக் கொள்ளல்.
 • சனநாயகம் தொடர்பான புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான படைப்புக்கள் ஊடாக மக்களை அறிவுறுத்துவதற்காக குறுந்திரைப்படங்களைத் தயாரித்துக் கொள்ளல்.

 

போட்டி நிபந்தனைகள்

 1. மும்மொழிகளிலும் குறுந்திரைப்படங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
 2. குறுந்திரைப்படங்களின் ஓட்ட நேரம் ஐந்து நிமிடங்களுக்கு மேற்படல் கூடாது.
 3. HD டிஜிடல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல் வேண்டும்.
 4. படங்களின் தன்மை HD (16.9) மற்றும் வீடியோ மாதிரி MP4 (DVD Data Format) ஆக இருத்தல் வேண்டும்.
 5. தேர்ந்தெடுக்கப்படும் குறுந்திரைப்படங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்கான இணக்கத்தை வழங்குதல் வேண்டும்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

   திறந்த பிரிவு

 1. முதலாம் இடம் 125,000 ரூபா
 2. இரண்டாம் இடம் 75,000 ரூபா
 3. மூன்றாம் இடம் 50,000 ரூபா

  பாடசாலை பிரிவு

 1. முதலாம் இடம் 50,000 ரூபா
 2. இரண்டாம் இடம் 30,000 ரூபா
 3. மூன்றாம் இடம் 20,000 ரூபா

இதற்கு மேலதிகமாக குறுந்திரைப்படங்களைச் சமர்ப்பிக்கின்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் சான்றிதழொன்று வழங்கப்படும்.

மாவட்ட மட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் விதத்தில் 22 செயலமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலமர்வுகள் 2019 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதோடு, அந்தச் செயலமர்வுகளில்,

 • சனநாயகம், மக்கள் இறைமை மறறும் சர்வசன வாக்குரிமை தொடர்பாக பாடசாலை மாணவர்களை அறிவுறுத்தல்.
 • குறுந்திரைப்படங்களைத் தயாரித்தல் பணிகள் தொடர்பான தொழிநுட்ப அறிவை மேம்படுத்தல்.

நிகழ்ச்சித் திட்டங்களின் காலச் சட்டகம்

 • குறுந்திரைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2019 மே மாதம் 15 ஆம் திகதி.
 • தேர்ந்த​தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்களை காட்சிபடுத்தல் விழா, கல்வியியலாளர் கருத்தாடல் மற்றும் பரிசளிப்பு 2019.06.08 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தரங்கனி திரையரங்கில் நடாத்தப்படும்