மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் , அரசாங்க அதிபரினால் இன்று (29-07-2019) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு   மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கௌரவ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், கௌரவ மாநகர முதல்வர், தவிசாளர்கள், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண சபை அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண திணைக்களத் தலைவர், மாவட்டத் திணைக்களத் தலைவர்,   மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக பதவி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என்போர் கலந்துகொண்டார்கள்.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்   வீதி அபிவிருத்தி, கல்விச் செயற்பாடுகள், நீர் விநியோகம், பெயர் பலகைகளை தமிழ் உட்பட பிற மொழிகளில் எழுதுதல், புகையிலை பயிரிற்கான மாற்றுப் பயிர்கள் ஆகிய பிரதேச அபிவிருத்திக் குழுக்களில் தீர்க்கப்படாதவை பற்றி கலந்துரையாடப்பட்டது. 

 30071
 30072