ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று செவ்வாய்க் கிழமை (30.07.2019) காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் வேல்ட் விசனின்(world vision) அனுசரணையில் கருத்தமர்வு நடைபெற்றது. இக்கருத்தமர்வில் வடக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர்,வேல்ட் விசன் திட்ட ஆலோசகர், தலைமைப்பீட நன்னடத்தை உத்தியோகத்தர், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் மற்றும் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

 சிறுவர் உரிமைகள் சமவாயம் சிறுவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, உளவியல் மற்றும் ஆன்மீகம் போன்ற நிறைவான செயற்பாடுகளிற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.
 31073
 3107131072