வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபு அறிமுக நிகழ்வு.

 

6819 1
 

தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து  ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) மற்றும் மொபிடெல்  வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபு அறிமுக நிகழ்வு இன்று 6-08-2019(செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 டிஜிட்டல் திட்ட வரைபின் மூலம் (SLT)  குழுமம்  வட மாகாணத்தினை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக மாற்றிடும் தேசிய குறிக்கோளினைக் கொண்டு செயற்படுகின்றது.  இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
 6819 2