மயிலிட்டி மற்றும் கரவெட்டிப் பிரதேசங்களில் புதிய வீடுகள் கையளிப்பு

 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் மயிலிட்டி மற்றும் கரவெட்டிப் பிரதேசங்களில்  வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது. இப் புதிய வீட்டுத் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள் ,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள்,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 முதற்கட்டமாக  தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில்  149 புதிய வீடுகள் வழங்கப்பட்டதோடு அவற்றுள் 6 வீடுகளும், கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் 15 புதிய வீடுகள் வழங்கப்பட்டதோடு அவற்றுள் 7 வீடுகளும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது.

 200819 1.1200819 2.2