maithiri

 

நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் " தேசிய செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு. 

 நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் " தேசிய செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இன்று 27-08-2019 (செவ்வாய்க்கிழமை) மு.ப 8.30 ற்கு ஆரம்பமாகி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இக் கருத்தரங்கில் ஜனாதிபதி செயலக பணிப்பாளர்

அசங்க . டீ. சில்வா, உளவியல் மருத்துவ நிபுணர் சமிந்த வீரசிறிவர்த்தன, மருத்துவர் சதுர அபேசூரிய , மாவட்ட , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

 மேலும் , இக் கருத்தரங்கில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மனவழுத்தம்,சிறுவர்பராய இனிமையான அனுபவங்கள்,  கசப்பான அனுபவங்கள் தொடர்பாக கலந்துரையாடல்    நடைபெறுகின்றது...

 270819 1.1.1270819 2.2.2
 270819 3.3.3270819 4