maithiri   

நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  மீன் பிடித் துறைமுகத்திற்கான  அடிக்கல் நிகழ்வு

   நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அவர்களினால்  பருத்தித்துறை மீன் பிடித் துறைமுகத்திற்கான  அடிக்கல் 30.08.2019 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு  நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில், மீன்பிடித் துறைமுகம், எரிபொருள் நிரப்பு நிலையம், வலை தயாரிக்கும் நிலையம், சன சமூக நிலையம், சிறுவர் பூங்கா, படகு தரித்து நிற்கும்  நிலையம் , குளிரூட்டல் பகுதி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் ,இந் நிகழ்வில்  அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ  அமைச்சர்கள், கௌரவ வட மாகாண  ஆளுநர், கௌரவ பாராளுமன்ற  உறுப்பினர்கள் , கௌரவ தவிசாளர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் , திணைக்களத் தலைவர்கள், அரச  உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.