“என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல்.

 யாழ் மாவட்ட செயலகத்தில் " என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல் கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையில் 03.09.2019 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கௌரவ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், கௌரவ யாழ் மாநகரசபை மேஜர் ஆர்னோல்ட், கௌரவ தவிசாளர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.  

   தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் என்டர் பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்தில் புரட்டாதி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.​

40919 1 40919 2 40919 3