தகவல்அறியும்உரிமைச்சட்டம் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு.

 தகவல்  அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அனுசரணையுடன் யாழ் மாவட்டச் செயலகத்தின்  ஏற்பாட்டில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில்  " தகவல்  அறியும் உரிமைச்சட்டம்  (2016 ஆம் ஆண்டின் 12 ஆம்  இலக்கச்சட்டம்) தொடர்பான  விழிப்புணர்வூட்டும் செயலமர்வு "  சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிற்கு 30.10.2019 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை  மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

    இச் செயலமர்வில் வளவாளராக  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.சி.ரகுராம் (யாழ்.பல்கலைக்கழகம்)அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
301019 1301019 2
301019 3