"மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்"

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் "மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்" காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
   
இம் மாவட்ட  அபிவிருத்தி குழு கூட்டத்தில் நவீல்ட் பாடசாலைக்கான திட்ட முன்மொழிவு, விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான கல்வி அலகு, சீர்திருத்த பாடசாலை முன்னேற்றம், பொலிஸாருடன் இணைந்த நடமாடும் சேவைகள் முன்னேற்றம், கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்கள் மற்றும் பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கள், மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு முன்னேற்றம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு பொதி வழங்கும் செயற்பாடுகள், முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்குதல்,  உலகவங்கி நிதி உதவியுடன் முன்பள்ளிகள் அபிவிருத்தி முன்னேற்றம், சிறுவர் தொடர்பான தரவுகளை மீளமைத்தல் , சிறுவர் பெண்கள்  அபிவிருத்தி  அலகு இல்லாத பிரதேசங்களில் ஸ்தாபித்தல் மற்றும்  அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் தொடர்பான செயற்பாடுகள்  ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது   
இக் கூட்டத்தில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும்  அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள்.
    
     081119 11081119 22