ஒரே பார்வையில் யாழ் மாவட்டம்

அமைவிடம்

இலங்கையில் வடக்கின் முடிவில் உள்ள வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டம் கொழும்பிலிருந்து 410 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இது தீபகற்பத்தையும் வசிக்கக் கூடிய ஏழு தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளாக இந்திய பெருங்கடல் உள்ளது.

மொத்த நிலப்பரப்பு உள்நாட்டு நீர் உட்பட 1,012.01 சதுர கிலோ மீற்றர் ஆகும். யாழ்ப்பாண மாவட்டம் தீவுகள், வலிகாமம் , தென்மராட்சி மற்றும் வடமராட்சி என நான்கு உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் வரண்ட வலயத்தின் கீழ் வருகின்றது. ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அதிக மழை கிடைக்கிறது. வடகிழக்குப் பருவ மழை ஏப்ரல் முதல் மே மாதம் வரை கிடைக்கிறது. இடையிடையே நிலையற்ற பருவமழை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்திற்கு 2013ம் ஆண்டு 1033.30 மி.மி மழை கிடைத்துள்ளது. வருடாந்த வெப்பநிலை 25.30 – 31.09 சென்ரிகிறேட்டிற்கிடையில் மாறுபடுவதால் சராசரி வெப்பநிலையாக 28.18 பாகை செல்சியஸ் காணப்படுகிறது.

மண்

யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள மண் மற்றும் நீர் வளம் சுண்ணாம்பு நிலவியலுடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. கடலலைகள் மற்றும் காற்று சுண்ணாம்புக்கல்லில் ஏற்படுத்தும் தாக்கத்தால் கடல் வைப்புகள் மற்றும் படிவுகளிலிருந்து மண் உருவாகின்றது. தீபகற்பத்தில் நிலத்தடி நீர் வளமாகக் காணப்படுவதற்கு அடுக்குச் சுண்ணாம்பு ஆதாரமாக உள்ளது. மத்திய பகுதிகளில் (60,000 கெக்ரேயர்) நல்ல வடிகால் மற்றும் உயர் உற்பத்தி கல்சிக் சிவப்பு மஞ்சள் லடசோல் மற்றும் சிவப்பு மஞ்சள் லடசோல் மண் வகைகள் காணப்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் (26,000 கெக்ரேயர்) அல்கலின் உப்பு மண் மற்றும் ரஜசோல் காணப்படுவதுடன் வழுக்கையாற்றுப் பகுதியில் (10,000 கெக்ரேயர்) வண்டல் மண் காணப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் பவளச் சுண்ணாம்பு கிடைக்கிறது. இந்த வித்தியாசமான மண் வகைகள் நல்ல அறுவடைக்கும் உள்ளூர் பயிர்களுக்கும் உதவுகின்றன. மண் அடுக்கு ஆழம் 90 – 150சென்ரி மீற்றர் வரை வேறுபடுகிறது.

நீர்

யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள நிலத்தடி நீர் வளத்தை சேமிக்க சுண்ணாம்புக்கல்லின் துணைப்படை நிலப்பரப்பு உதவுகின்றது. பிரதானமாக நீரைத் தேக்கி வைத்திருக்க சுண்ணாம்புக்கல் உதவுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலுள்ள நிலத்தடி நீரை ஆவியாதல் இழப்புக்களற்றுத் தேக்கி வைத்திருக்கும் ஆற்றல் பல தனிப்பட்ட குகைகள் மற்றும் நிலக்குடைவுகளில் காணப்படுகிறது. இது மிகச் சிறந்த நீர்த் தேக்கமாகும்.

யாழ் குடாநாட்டில் மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நன்னீராக உருவாகுகிறது. நிலத்தடி நன்னீர் சுண்ணாம்புக்கல்லிற்குக் கீழ் செல்லவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நன்னீர் படிமத்தில் கடல் நீருடன் தொடர்புடைய நன்னீர் மிதப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடர்த்தி வேறுபாடு(1.0,0.25) 40:1 என்ற விகிதத்தில் காணப்படுகிறது. கடல் மட்டத்திற்கு மேல் காணப்படும் ஒவ்வொரு மீற்றரிலுமுள்ள நன்னீர் 40 மீற்றர் ஆழத்திலுள்ள நன்னீர் படிமம் வரை கடல்நீர் கலக்காமல் காணப்படுகிறது. கடல் நீருக்கும் நன்னீருக்கும் இடையே இடைமுகம் காணப்படவில்லை.

சனத்தொகை

31.12.2013 ல் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த மக்களின் தொகை 610,640 ஆகும். இவற்றுள் 186,681 குடும்பங்களும் பெண்களின் தொகை 52.31% யாழ் மாவட்ட மொத்த மக்களின் தொகையில் தமிழர் 601,353 , சிங்களவர் 355, முஸ்லிம் மக்கள் 8,392. மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர் 83.23%, கிறிஸ்தவ சமயத்தவர் 15.24%, இஸ்லாம் சயமயத்தவர் 1.42%, பெளத்த சமயத்தவர் 0.0046% ஆகும்.

விவசாயம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசயத்துறை மிக முக்கியமானதாகும். இந்த மாவட்ட மக்களில் 1/3 பகுதி அதாவது 54,417 குடும்பங்கள் முற்றிலும் விவசாயத்தில் தங்கி இருப்பதோடு கால்நடையிலும் பெரும் பகுதி மக்கள் வீட்டுத் தோட்டத்திலும் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பாரம்பியமாக வேளாண்மை சமூகமாகக் காணப்படுகின்றனர். அவர்களது கலாச்சாரம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்த்தாகக் கொண்டது. இந்த பாரம்பரிய விவசாயிகளின் தலைமுறையினரிடம் மண், காலநிலை, விவசாயத் தொழிநுட்பம் , உற்பத்தித் திறன் பற்றிய அனுபவம் காணப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த அறுவடைத் தொழிநுட்பங்களில் தங்கள் முன்னோர்களிடமிருந்து மற்றும் பயிற்சி, சோதணை மூலம் அபிவிருத்தியடைந்தது நவீனதொழிநுட்பங்களை விடபொருத்தமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய விவசாயிகள் கடந்த மூன்று தசாப்தங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக தனிப்பட்ட விவசாயத்தொழிநுட்ப்ப் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பாண மாவட்டம் பெரும்பாலும் ஒரு விவசாயப் பகுதி அத்துடன் கூடுதலான விளைபொருட்கள் கிடைக்கக் கூடியதாக உள்ளது. அதாவது வியாபார நோக்கங்களுக்காக சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, புகையிலை, காய்கறி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் பயிரிடப்படுகிறது. மற்றைய பயிர்களான நெல், பருப்பு வகைகள் மற்றும் தேங்காய் என்பன கணிசமான அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் பனம்பொருட்களிலிருந்தும் கணிசமான வருமானம் கிடைக்கின்றது.

2013/14 ல் மகா பருவத்தில் 11,900 ஹெக்ரேயர் அளவு நிலத்தில் நெற்பயிர் செய்கையில் இலக்காக இருந்தும் 9,520 ஹெக்ரேயர் அளவு நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி 33,320 மெற்றிக் தொன் ஆகும். மற்றொரு பயிர்ச்செய்கையில் மகா பருவத்தில் 2013/14 ல் 4,820 ஹெக்ரேயர் அளவு நிலத்தில் 39,510.5 மெற்றிக் தொன் எதிர்பார்க்கப்பட்டது. யால பருவத்தில் 2014ம் ஆண்டு 2,184 ஹெக்ரேயர் அளவு நிலத்தில் உற்பத்தி 25,946 ஆக எதிர்பார்க்கப்பட்டது. இவ் இலக்குகள் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது மற்றும் உறுதிசெய்யப்பட்டது. எனினும் இவ் இலக்குகளை அடைவதற்கு விவசாயிகளுக்குக் கிடைக்கும் சேவைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. திறமையான நுட்பத்தை உருவாக்கிய முக்கிய காரணிகள் விவசாய உள்ளீடுகளையும் மற்றைய சேவைகளையும் ஒன்றாக வழங்குகின்றன. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உர மானியத் திட்டம் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பதில் பங்களிக்கக் கூடிய ஒரு முக்கிய காரணியாக அமையும்.

மீன்பிடி

யாழ்ப்பாண மாவட்டம் கடலாலும் ஏரியாலும் சூழப்பட்டுள்ளது. மீன்வளத்துறை யாழ் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான துறையாகும். யாழ் மாவட்டத்தில் மீனவத் தொழிலில் ஈடுபடும் கிட்டத்தட்ட 20,699 குடும்பங்களைக் கொண்ட 88,286 பேரும் மற்றும் 21,582 பேரும் முக்கிய பொருளாதார நடவடிக்கையாகவும் மற்றும் வாழ்வாதார மூலமாகவும் அமைகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பின்வரும் மீன் வளங்கள் கிடைக்கின்றன.

சுறா,  நெத்தலி , சாலை, இறால்,   நண்டு,   சூடை, சிங்க இறால், கணவாய்,   பாரை, கும்புளா,  விளை,   சூரை, சீலா,   வாலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து சுமார் 6 % மீன் உற்பத்தி தேசிய பங்களிப்பு வகிக்கின்றது.

கல்வி

காலனித்துவக் காலத்திலிருந்து நீண்ட கால பாரம்பரியமாக கல்வியின் உயர் பெறுபேற்றிற்காக அர்ப்பணிப்பும் மிக முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள மாவட்டங்களில் யாழப்பாண மாவட்டம் மிக உயர்ந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டமாகக் காணப்படுகிறது. யாழ் மாவட்ட மக்களுக்கு கல்வி முக்கிய விடயமாக உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவுகள், வலிகாமம் , யாழ்ப்பாணம், தென்மராட்சி மற்றும் வடமராட்சி ஆகிய 5 கல்வி வலயங்கள் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 503 பள்ளிக்கூடங்களில் தற்போது 445 பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. மாணவர்கள் எண்ணிக்கை 131,632 மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7,313 ஆகும். ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம் 18 ஆகும்.

சுகாதாரம்

வட மாகாண மக்களின் முக்கிய பொது சுகாதார மருத்துவ நிறுவனமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விளங்குவதுடன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாதிமார், மருத்துவிச்சிமார் கற்கவும் உதவுகின்றது. யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் மற்றைய அனைத்து நோய் குணப்படுத்தும் நிறுவனங்கள் வருகின்றது. இந்த நிறுவனங்கள் வலையமைப்பில் பின்வரும் மூன்று நிலைகளை உருவாக்கியுள்ளது.

ஆதார வைத்தியசாலை( A & B வகை) - 04

பிரதேச வைத்தியசாலைகள்                 -  23

ஆரம்ப மருத்துவப் பராமரிப்புப் பிரிவு  -   17

மேற்படி வைத்தியசாலைகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் மேலதிகமாகப் புற்றுநோய் பிரிவு தெல்லிப்பழையிலும் மார்பு நோய்ச் சிகிச்சைப் பிரிவு யாழ்ப்பாணத்திலும் செயற்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் உள்ள தடுப்புப் பிரிவில் முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தை நல சேவைப் பிரிவு மருத்துவ மையங்கள் உள்ளன.

ஆயுர்வேத சிகிச்சை முறையின் கீழ் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை 01ம், கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகள் 04ம், மற்றும் மத்திய ஆயுர்வேத மருத்துவ மையங்கள் 10ம் காணப்படுகிறது. மேலதிகமாக 37 இலவச ஆயுர்வேத மருத்துவ மையங்கள் உள்ளூர் அரசாங்கத்திற்குக் கீழ் காணப்படுகிறது.

மாவட்டத்தில் அனைத்து மிகப் புராதன, தடுப்பு, குணப்படுத்தல், மற்றும் மீள்கட்டுமாண சுகாதார நடவடிக்கைகளுக்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ் இயங்கும் மருத்துவ மேற்பார்வையாளர், மாவட்ட வைத்திய அதிகாரிகள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் போன்ற தலைமைத்துவ நிறுவனங்கள் பொறுப்பாக செயற்பட்டு வருகின்றன.

சுற்றுலா

யாழ்ப்பாணம் சுற்றுலா மற்றும் உணவகத் தொழிலில் மிகப் பெரிய பங்காற்றுகிறது. யாழ்ப்பாணத்தில் வரலாற்று ரீதியான, இயற்கையான மற்றும் மத வழிபாட்டு இடங்கள் போன்ற 3 வகையான இடங்கள் உள்ளன. நெடுந்தீவில் வெடியரசன் துறைமுகம், ஊர்காவற்றுறையில் ஹமென்கின் துறைமுகம், யாழ்ப்பாணத் துறைமுகம், யமுனாக் குளம், யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான மாந்திரி மானியா (அரச மாளிகை) என்பன முக்கிய இயற்கையான வரலாற்றுப் பிரதேசங்கள் ஆகும். வேலணையில் சாட்டி பிரதேசம், காரைநகரில் கசூரினா கடற்கரை, மணற்காட்டிலுள்ள கடற்கரையோரங்கள் ஆகியன இயற்கையான இடங்கள் ஆகும். நல்லூர் முருகன் ஆலயம், நகுலேஸ்வரம் சிவன் ஆலயம், வல்லிபுரம் விஷ்ணு ஆலயம்,சென்ட் ஜேம்ஸ் தேவாலயம், சங்கனை டச் தேவாலயம், நயினாதீவு விகாரை என்பன பிரசித்தி பெற்ற மதத் தலங்கள் ஆகும்.

மரநடுகை

நாட்டின் மற்றைய பகுதிகளைப் போல யாழ் மாவட்டம் காடுகளால் சூழப்படவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் இயற்கையாக பனை மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. பொதுவான இடங்களிலும், தனியார் காணிகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய அளவிலான தென்னந் தோட்டங்கள், உள்ளூர் மரங்கள் மற்றும் பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த தாவரப் பகுதிகள் கணிசமான குடும்பங்களுக்கு வருமானத்தையும், சத்துள்ள உணவையும் வழங்குவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முக்கிய பங்காற்றுகின்றது. வேளாண்மை வனவியல் ஒரு உண்மையான காடு அல்ல. வேளாண்மை மற்றும் மனித வாழ்க்கையில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் என்பன கணிசமான அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. காடுகள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் பெரும் பங்காற்றுவதால் விவசாயம் மற்றும் மனிதன் வாழ்வதற்கு உதவுகின்றது. மரங்கள் சமூகங்களுக்குப் பல நன்மைகளைத் தருகின்றன. வெவ்வேறு காலநிலைகளில் உணவு, மருந்து, நிழல், பச்சை எரு, மரப்பலகை மற்றும் இயற்கையான குளிர்ச்சியையும் தருகின்றது.

யுத்த காலத்தில் பனை, தென்னை மற்றும் பல மரங்கள் வீடுகளிலும், பொது இடங்களான பாடசாலைகள், கோயில்கள், வீதியோரங்கள், சுடுகாடுகள், கடற்கரையோரங்கள் போன்றவற்றில் வெட்டி சேதமாக்கப்பட்டன. மேலும் பொது மக்கள் விறகுத் தேவைக்காக மரத்தை வெட்டத் தொடங்கினர்.

பல்லாண்டுப் பருவத் தாவரங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையினாலும் மற்றும் 2008 நவம்பர் 4வது வாரத்தில் தொடர்ந்து வீசிய புயல் மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. பெருமளவான பல்லாண்டுப் பருவத் தாவரங்கள் முற்றாக அல்லது பகுதியாக சேதடைந்ததால் உறுதித் தன்மையை இழந்து விட்டன.

உலகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று யாழ் மாவட்டத்திலும் வீதியோரங்களில் எந்த மரங்களும் இல்லை என்பது பொதுவானது. அதே நேரத்தில் கடற்கரை வரசையில் எவ்வித காற்று திணைபடை இல்லை. மிகவும் அதிகமாக சுற்றுச்சூழல் பாதிப்படைவதற்கான பொதுவான காரணமான கடல் நீர் மற்றும் உப்புக் காற்று என்பன நிலத்திற்குள் ஊடுருவுதல் ஆகும். மேலும் இதனால் விவசாயப் பயிர்களுக்கும் மரங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது.

மரங்கள் மிகவும் வளமான நிலத்தின் உற்பத்தித் திறனையும் பல்வகைத் தன்மையையும் அதிகரிக்க முக்கிய பங்காற்றுகின்றன. பொதுவாக இந்த மாவட்டத்தில் வேளாண்மை வனவியல் அமைப்புகள் காணப்படுகின்றன. மரநடுகைத் திட்டம் ஒரு வீட்டுத் திட்டமாக செயற்பட்டு வருகின்றது. மாவட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் மரப் பயிர்கள் நடப்பட்ட மரநடுகையானது வேளாண்மை வனவியல் மற்றும் சமூக காடுகள் திட்டத்தில் முன்னேற்றத்திற்குரிய சாத்தியம் காணப்படுகிறது. வீட்டுத்தோட்ட முறை பயிரிடும் முறைகளில் ஒருங்கிணைந்த முறையாகும். மரங்களை வீடுகளில் நடப்படுவதால் உணவு, எரிபொருள், பலகை மற்றும் பாதுகாப்புக்கு உதவுகின்றது.

யாழ் மாவட்டத்தில் 2011லிருந்து 2013 வரை ஜனசெவன தேசிய மரநடுகையின் கீழ் சுமார் 35,740 பெறுமதியான மரங்கள் நடப்பட்டன. வீடுகளில், பள்ளிக்கூடங்களில்,பொது இடங்களில், வீதியோரங்களில், கடற்கரைகளில், கோயில்களில் மற்றும் அரச நிறுவனங்களில் பெரும்பாலான மரங்கள் நடப்பட்டன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

பெருமளவிலான ஆண்கள் இன மோதல்கள் மற்றும் சுனாமி பேரழிவிற்குப் பின்னர் மரணம் மற்றும் காணாமல் போன காரணத்தினால் பெண்கள் குடும்பத் தலைவியாக மாற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கிட்டத்தட்ட 27,756 பெண்கள் குடும்பத் தலைவிகளாகக் காணப்படுகின்றனர். 40 வயதிற்குக் குறைந்தவாகளின் எண்ணிக்கை 2,360 ஆகும்.

குடும்பப் பெண் தலைவிகள் சிறப்புத் திட்டங்களில் பங்கு பற்றுவதால் அவர்களின் அதிர்ச்சி மற்றும் துன்பத்தை சமாதானப்படுத்தும் உதவிகரமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடியதாகவும் இருக்கும்.

சுற்றுச்சூழல் மாசுபடல்

யாழ் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடல் மிகவும் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. கூடுதலாக நிலத்தடி நீரைப் பிரித்தெடுத்தல், நைதரசன் உரங்களை கூடுதலாக உபயோகித்தல், கூடுதலான விவசாய உரங்கள் உபயோகித்தல், சுன்னாகம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மின்சார ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் குடிநீர் தண்ணீர் கிணறுகள் போன்ற நிலத்தடி நீரில் எண்ணெய் படை போன்றன மிகவும் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. யாழ் மாநகரசபைப் பகுதியில் ஈகொலி கழிவுகளை அகற்றல் முறை அமைப்பு இல்லாதது மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளிலுள்ள முறையற்ற திண்மக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட வழிவகுக்கிறது. உயிரி பன்முகத்தன்மை சீர்கேடு மற்றும் பாதினியக்களை மூலம் உயிராபத்துகள், குளங்களிலுள்ள உப்பு நீரை உரிய முறையில் நீக்காமை, திட்டமிடாத மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு, காலநிலை மாற்றங்கள், கடலரிப்பு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிர்வாகம்

முழு மாவட்டத்திற்கும் அரசாங்க அதிபர்/ மாவட்டச் செயலாளர் நிர்வாக அதிகாரியாகக் காணப்படுகிறார். அரச நிர்வாக வேலைகள் மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச, கிராம மட்ட நிலைகளில் காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் 15 நிர்வாகப் பிரிவுகளும் 435 கிராம சேவகர் பிரிவுகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் மேலதிகமாக உள்ளூர் அமைப்புக்கள் (மாநகரசபை -01, நகர சபைகள் – 03 ,பிரதேச சபைகள் -13)சுகாதாரப் பிரிவுகளிலுள்ள மருத்துவ உத்தியோகத்தர்கள் – 12 மற்றும் 05 கல்வி வலயங்களும் இயங்குகின்றன.