Public Day
Monday 8:30am-4:15pm
Wednesday 8:30am-4:15pm
Vehicle Number Plates
Registrar and Notary public
Scheduled Events
October 2018
S M T W T F S
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
Online User
අප සමඟ අමුත්තන් 728 ක් සබැදී සිටී
There are no translations available.

 

Successful Performance achieved in the Evaluation Programme of the Committee on Public Accounts Financial Year-2016

 

யாழ் மாவட்டத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்

நூல்வெளியீட்டு விழா 26.07.2018

26.07.2018ம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.30 மணியளவில் மாவட்டச் செயலகக் கேட்போர்கூடத்தில் யாழ் மாவட்டத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட (2018 – 2022) நூல் வெளியீட்டு விழாவானது அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கௌரவ.க.வி. விக்னேஸ்வரன், முதலமைச்சர், (வடமாகாணம்), இணைத்தலைவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, யாழ்ப்பாணம் அவர்களால் குறித்த திட்டத்தின் மென்பிரதியானது யாழ் மாவட்டச் செயலகத்தின் இணையத்தளத்தில்(Website) பதிவேற்றம் செய்யப்பட்டது.

மேலும் யாழ் மாவட்டத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட  (2018 – 2022) நூலின் முதல் பிரதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் கௌரவ .க.வி. விக்னேஸ்வரன், முதலமைச்சர், (வடமாகாணம்) அவர்களுக்கும் திரு.மனோ தித்தவெல, நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் அவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது

 

 

 

மாவட்டப் பண்பாட்டு விழா – 2018
யாழ் மாவட்ட கலை கலாசாரப்பேரவை 2018 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவினை வெகுவிமர்சையாக யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் 2018-07-27,28 ஆகிய இரு நாட்களும் நடத்தியிருந்தது. இவ் விழாவினை முன்னிட்டு முதலாம் நாள் நிகழ்வாக யாழ்ப்பணத் தமிழர் வாழ்வியற் பண்பாட்டுச் சுவடுகள் என்னும் விடயப்பொருளில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்கள் தலைமையில் ஆய்வரங்கு நடைபெற்றது. இவ்வாய்வரங்கில் யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கவழக்கங்கள் என்னும் விடயத்தில் திருவாளர் சோ.பத்மநாதன் அவர்களும் யாழ்ப்பாணத்துக் கோயில்சார் ஆற்றுகைக்கலைகள் என்னும் விடயத்தில் திருவாளர் க.றாஜேஸ்கண்ணன் அவர்களும் யாழ்ப்பாணத்துக் கோயில்சார் அலங்காரக்கலைகள் என்னும் விடயத்தில் திருவாளர் க.செல்வமனோகரன் அவர்களும் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய 19 ஆம் நூற்றாண்டுப் பத்திரிகைகள் (1948 காலப்பகுதி வரை) என்னும் விடயத்தில் கலாநிதி சி.பத்மராஜா அவர்களும்;  யாழ்ப்பாணத்து நிகழ்த்து கலைகளில் கூத்துக்கலை என்னும் விடயத்தில் திருவாளர் ஜோன்சன் றாஜ்குமார் அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வானது யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையின் தலைவருமாகிய திருவாளர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாளர் அ.பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருவாட்டி அபிராமி பாலமுரளி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி மாலினி கிருஸ்னானந்தன் அவர்களும் கலாபூஷணம் இராசு சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


விழாவின் முக்கிய நிகழ்வுகளாக யாழ்ப்பாண வாழ்வும் வளமும் - மரபுரிமைச் சொத்துக்களின் முகாமைத்துவம் என்னும் மென்பொருள் அறிமுகமும் மூத்த பதினைந்து கலைஞர்களுக்கு யாழ்முத்து விருதும் இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து இளங்கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. பொன்னாலை சந்திரபரத கலாலய மாணவிகளின் அன்பே உலகாளும் நாட்டிய நாடகமும் உரும்பிராய் கலைக்கோயில் ஆடற்கலையகம் வழங்கிய கீர்த்தனம் தனிநடனமும் ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜி நாடக மன்றம் வழங்கி கடவுளின் ஒட்சிசன் நாடகமும் குறிப்பிடத்தக்க கலைநிகழ்வுகளாக அமைந்திருந்தன


 

 

Sustainable Development of Jaffna District Five Year District Development Plan 2018-2022

Sustainable Development of Jaffna District Five Year District Development Plan 2018-2022

 

 

 

 

 

 

 

 

 

 

பட்டதாரி பயிலுனர்களின் பெயர், NIC Number உள்ளதா என பார்ப்பதற்கு GRADUATE NAMES

LIST 1

LIST 2 ஐ click பண்ணவும்

 

 

 

 

 

வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பயிலுநர்களுக்கு ​தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

 

யாழ்மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலுமுள்ள கிராம அபிவிருத்தி திணைக்கள மகளீர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து Diploma மற்றும்  NVQ  மட்ட தையல் பயிற்சி நெறியினை பூர்த்திசெய்து வெளியேறிய பயிலுநர்களுள் மிகவும் வறிய நிலையிலுள்ள பயிலுநர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் 46 பயிலுநர்கள் தெரிவுசெய்யப்பட்டு முதற்கட்டமாக தீவகம் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய பிரிவுகளினைச் சேர்ந்த 20 பயிலுநர்களுக்கு அவர்களினது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் மற்றும் யாழ்மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.பஞ்சலிங்கம் ஆகியோரினால் தையல் இயந்திரங்கள் 09.07.2018 இல் தலைமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

.......................................................................................................

 

 

DCC MEETING 04.06.2018 MINUTES பார்ப்பதற்கு MINUTES ஐ click பண்ணவும்

 

 

 

 

 

 

 

பட்டதாரி பயிலுனர்களின் நேர்முகத் தேர்விற்கு தங்கள் பெயர், NIC Number உள்ளதா என பார்ப்பதற்கு GRADUATE NAME LIST ஐ click பண்ணவும்