78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

Events

News

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

24 October 2026

15 ஆளுமைகளுக்கு ‘யாழ்முத்து விருது’ வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு மதிப்புமிக்க ‘யாழ்முத்து விருது – 2026’ வழங்கிக்...

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

24 October 2026

15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 15 இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ வழங்கிக்...

தமிழர் பண்பாட்டையும் கலை மரபுகளையும் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026

24 October 2026

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026 ) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு மாவட்டச் செயலக நுழைவாயிலிருந்து தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி கேட்போர் கூடத்தை வந்ததடைந்தது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைத் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை!

24 October 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமை உரை : இப் பயிற்சிகளின் மூலம்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்

23 October 2026

நவம்பர் முதல் பெப்ரவரி வரை விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி,...

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026

22 October 2026

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026 இடம் : மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் காலம் : 23.10.2026 வெள்ளிக்கிழமை நேரம் : பி.ப 1.00 மணி - தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம் (மருதடிப் பிள்ளையார் ஆலயம், றக்கா வீதி) பி.ப 1.30 மணி - அரங்க நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்    

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான மூன்றாம் காலாண்டுக் கூட்டம்

22 October 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமையுரை : மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகப் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதுடன்,...

யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு

22 October 2026

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு...

யாழ்ப்பாண மாவட்ட சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்ட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம்

22 October 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோர சமூகங்களை சுனாமி அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்கான 'UNESCO-IOC சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் (TRRP) தொடர்பான விசேட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் அறிமுகவுரையினை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்...

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

22 October 2026

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும்,...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online

 

நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் “ நீதிக்கான அணுகுவழி ” நடமாடும் சேவை.

 banner

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும்இ இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு. 
 

திணைக்களங்கள்

 சேவைகள்

ஆவண விபரங்கள்

1.

நீதி அமைச்சின் - தொழிலாளர் தீர்ப்பாயம்,சமாதான நீதவான், தீடீர் மரண விசாரணை,
சத்திய பிரமாணத்திற்கான ஆணையாளர்,அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்.

* தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்

 வெளிநாட்டு அமைச்சின் மூலமான சத்தியபிரமாண சான்றளிப்பு pdfic2

2

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்

*  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.

* காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்,காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

 

3

சட்ட உதவி ஆணைக்குழு

* நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

* ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

 

4

இழப்பீட்டுக்கான அலுவலகம்
 

* புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

* சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

  pdfic2

5

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்

* இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

6

குற்றம் மற்றும் சாட்சியங்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
 

* குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 pdfic2

7

ஆட்பதிவுத் திணைக்களம்

* புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட   

       விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்

*   ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

*   அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

8

பதிவாளர் நாயகத் திணைக்களம்

*   காலம்கடந்த பிறப்பு, இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்

 

9

சமூகச் சீர்திருத்த அலுவலகம்

*   சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

10

மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களம்

* அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.

*   அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

 

11

மத்தியஸ்த சபை

* மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)

* ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

 

12

சிறைச்சாலைத் திணைக்களம்

*   சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

*   சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்

*   கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

 

13

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு

*   சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.

 pdfic2

14

தொழில் பயிற்சி அதிகார சபை

*   தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்

 
மேலும் கடன் இணக்க சபைத் திணைக்களம் ,பனை அபிவிருத்தி சபை ,புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது