Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

Government Agent/District Secretary

GA Piiratheepan

 

Mr.M.Piiratheepan 


 
10
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாண மாணவர்களுக்கான சனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் கூட்டுறவு பிரதியமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் கெளரவ கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதல் 20 இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.100,000 வீதம் உதவித்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டன..See more...
 

Events

News

சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகங்களுக்கு விருது

28 September 2026

சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்...

வடக்கின் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களுக்கு சனாதிபதி நிதியத்தின் கௌரவிப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

28 September 2026

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாண மாணவர்களுக்கான சனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வட...

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு

28 September 2026

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமான செப்ரெம்பர் 28 பிரகடனப்படுத்தப்பட்டதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில் 25.09.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வானது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்கள், அரசியல் விஞ்ஞான உயர்தர மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராமிய சமூக மட்ட அமைப்புகளின்...

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு

28 September 2026

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமான செப்ரெம்பர் 28 பிரகடனப்படுத்தப்பட்டதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில் 25.09.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வானது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்கள், அரசியல் விஞ்ஞான உயர்தர மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராமிய சமூக மட்ட அமைப்புகளின்...

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு!

28 September 2026

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கு சாரணர் பயிற்சியை வழங்கி, சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 25.09.2026 அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலைகள் ஆணையாளர் – வழங்கல் மற்றும் சேவைகள் திரு. B.D.M.G.B. திஸாநாயக்க, வட மாகாண சாரணர் ஆணையாளர் திரு. P. அஜித்குமார், யாழ்ப்பாண சிறைச்சாலை...

யாழ். மாவட்ட அரச வீட்டுத்திட்டங்களுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும் கிளிநொச்சியிலிருந்து மணல் பெற ஏற்பாடு

24 September 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் 04.09.2026 அன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும், 17.09.2026 அன்று வடக்கு...

குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி மற்றும் நெடுந்தீவு மகா வித்தியாலய விளையாட்டு அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளை அரசாங்க அதிபர் நேரில் ஆய்வு !

24 September 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்து இணைப்பாக விளங்கும் குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கான அணுகுச் சாலை புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய (23.09.2026) நேரில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். குறிகட்டுவான் இறங்குதுறைக்கான அணுகுச் சாலையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்ட அரசாங்க அதிபர், முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்....

காரைநகரில் கோலாகலமாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா - 2026

23 September 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (22.09.2026) காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட...

நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) திட்ட மீளாய்வு உள்ளிட்ட நடைமுறையில் தேசிய மட்டத்தில் யாழ்ப்பாணம் முன்னிலை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

23 September 2026

நலன்புரி நன்மைகள் வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.09.2026) மு. ப. 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமையுரை அஸ்வெசும திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு....

பிள்ளைகளின் நேர்மறையான ஆளுமை வளர்ச்சிக்கான முதல் தளமாக முன்பள்ளிகள் அமைய வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர்

23 September 2026

நேர்மறை ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பாக 60 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தூ (22.09.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமையுரை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்பள்ளி மட்டத்திலிருந்தே பிள்ளைகளிடையே நேர்மறையான சிந்தனை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online