இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.05.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் , மாவட்ட நிதி நிர்வாக நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதன் ஊடாக ஐய வினாக்களைத் குறைத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவாக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன்கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை எடுப்பதனால் சில இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள் வினைத்திறனாக செயற்படுவதாகவும் மேலும் வலுவாக செயற்படுவதன் ஊடாக
நிதி முகாமைத்துவத்தினை சிறப்பாக பேணமுடியும் என்றும் குறிப்பிட்டாா்.
இக் கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர் திருமதி.விஜயசிறி பிரேமதாஸ தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு.பிரபாகரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஸ்ரீ மோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்,எஸ். ரமேஸ்குமாா், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி என்.பொன்ராணி திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






