வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன்
இன்றைய தினம் (22.05.2025) மு. ப. 11.45 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீசன் ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கிராம மட்டத்தில் அடையாளம் காணப்படும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இக் கலந்துரையாடல்கள் அமைவதாகவும், பிரதேச செயலக ரீதியாகவும் நடைபெறவேண்டும் எனவும் அல்லது குறைந்தது கொத்தணி அடிப்படையில் பிரதேச செயலகங்களை இணைத்தாவது நடைபெற ஒழுங்கு செய்வது ஆரோக்கியமானது எனவும் குறிப்பிட்டார். மேலும், அரசியலில் பெண்களின் பங்கு காத்திரமானது எனவும், குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகளில் 07 பெண்கள் நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டியமையானது வரவேற்க்கத்தக்க விடயம் எனவும், இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில்பெண்களின் குரல் காத்திரமாக ஒலிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி, கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் உள்ளிட்ட பல காத்திரமான விடயத் தலைப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும், ஊராட்சி முற்ற அஞ்சல் பெட்டியின் நோக்கம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் - வடமாகாண GBV. தகவல் திரட்டும் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய அரச அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட மற்றும் பிராந்திய முகாமையாளர் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
1 2 3 4 5 6 7