யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E - Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி தலைமையில் இன்றைய தினம் (28.05.2025) மு.ப. 9.00 மணிக்கு மாநாட்டு நடைபெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து கருத்து தெரிவிக்கும் போது, E - Personal File முறைமை ஊடாக தனிநபர் கோவையினை கணினி முறையில் பேணுவதனால் உத்தியோகத்தர்களின் வேலைப்பழு குறைவடைவதுடன் வினைத்திறனான சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் இம்முறைமையினை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இப் பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இம் முறைமை நல்லூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரால் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இப்பயிற்சி நெறியின் வளவாளராக வும் கலந்து கொண்டார்.
இப் பயிற்சி நெறியில் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோவையினை பேணும் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6