தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பழைய பூங்காவை பசுமைக்காடாக்கல் செயற்றிட்டம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 09.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபர் அமரர் சேர் பேர்சிவல் அக்லான்ட் டைக் அவர்களினால் 27 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு ஆரோக்கியமாகவாழ மரங்களை நாட்டினார். தற்போது அதனை மேலும் பேணுவதற்காக முதற்கட்டமாக 500 மரங்கள் நடுகை செய்யும் திட்டத்தில் இன்றைய தினம் 250 மரங்களை நாட்டி சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக பேணுவோம் எனவும், நாம் வாழும் காலத்தில் சமூகத்திற்கு நல்ல விடயங்களைச் செய்வோம் எனவும் குறிப்பிட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டி குறிப்பிட்ட காலத்திற்கு சீராக நீர் ஊற்றி பேணுவோம் எனவும் குறிப்பிட்டு, அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் பசுமைக்காடாக்கல் செயற்றிட்டத்தில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






