பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 16 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் தலைவர் திரு அப்புத்துரை அருந்தவநேசன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (14.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சி. சந்திரராஜா அவர்களும், கெளரவ விருந்தினராக ஓய்வூதிய அலுவலர் திரு ஜே. பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக மூத்த ஓய்வூதியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.






