யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமானது கழகத்தின் தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் அரசாங்க அதிபரும் கழகத்தின் போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பங்குபற்றி நலன்புரிக் கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.
இப் பொதுக் கூட்டத்தில் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு அங்கத்தவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் விபரங்கள் :
தலைவர் : திரு. ம. வித்தியானந்தநேசன் (பிரதிப் பணிப்பாளர், புள்ளிவிபரத் திணைக்களம்)
உப தலைவர் : திரு. நி. பிரபாகரன் (மேலதிக மாவட்டப் பதிவாளர்)
செயலாளர் :திருமதி கி. தயாபரி ( மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்)
உப செயலாளர் : திரு. க. சுபாகரன்
பொருளாளர் : திரு. உ. சுமன்
உப பொருளாளர் : திருமதி ஜெ. சிவகெளரி
விளையாட்டுச் செயலாளர் : திரு. எம். நிமலன்
நலன்புரிச் செயலாளர் : திருமதி வி. சுகுணாளினி
நிர்வாக சபை உறுப்பினர்கள் :
1.திரு நா. குகதாசன்
2.திருமதி எஸ். நிர்மலா
3.திருமதி க. குணதர்சனா
4.திரு பே. குகணேசர்
5.திரு. அ. தர்மேஸ்வரன்
6.திரு அ. நிறோஸ்
 
1 2 3 4 5 6 7 8 10 11