இக் கூட்டத்திற்கு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மீள்குடியேற்ற மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கே 50% மேலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இவ்வாண்டு இறுதிக்குள் வேலைத் திட்டங்களை நிதி திரும்பாதவகையில் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மழை காலத்திற்கு முன்னராக வீடமைப்பு நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தினை எடுத்துக்கூறியதுடன், வீதிப் புனரமைப்பு, மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோக இணைப்பு போன்ற திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் அடுத்த முன்னேற்ற கூட்டத்தினை எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதி நடாத்த ஒழுங்கு செய்யுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிற்குரிய மாவட்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






