2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது காலாண்டிற்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதம கணக்காளர் ,பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர்,உள்ளகக் கணக்காய்வாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொடர்புடைய சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 67 8