மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் உணர்வு ரீதியான விவேகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாண
மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) நண்பகல் 12.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் திருமதி வி. சந்திரமோகன் அவர்கள் கருத்துரைகளை நிகழ்த்தினார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.






