நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள விசேட நடமாடும் சேவை தொடர்பாக
அரசாங்க அதிபருடன் கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் (12.08.2025) ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா அஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார, திரு. துலீப் சேமரத்தன, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. தெ. கபிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட நாடும் சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
 
 
1 2 3 4 5 6