
அதனைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக 03 பேருக்கு கடவுச்சீட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், ஒருவருடைய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால,
கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர்,
வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கருணைநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கௌரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு சுமிந்த பத்திராஜ, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.






