யாழ்ப்பாண பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டம்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கிணங்க இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டதுடன் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ க.இளங்குமரன், கௌரவ ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் கெளரவ சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






