யாழ் மாவட்ட மகளிர் விவகாரக்குழுக்களின் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
யாழ் மாவட்ட மகளிர் விவகாரக்குழுக்களின் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (24.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், சமூக சேவையாக கடமையாற்றும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலமே பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்த முடியும் எனவும், இதற்காக பிரதேச மட்ட குழுக்களுக் ஊடாக இந்த மாவட்ட மட்ட சம்மேளனம் அமைக்கப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும்,
மகளிர் விவாகார சம்மேளனம் புதிய செயற்றிட்டங்களை அனைவரும் இணைந்து சேவையாற்ற வேண்டும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை மற்றும் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்படதுடன், பொருளாரினால் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாக சபைத் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாக சபையின் தலைவராக திருமதி மதனரூபி நிரோஷானந் அவர்களும், செயலாளராக திருமதி விசாலினி செல்வகுமார், பொருளாளராக திருமதி சர்மிளா அருண்பாபு அவர்களையும் உள்ளடக்கியவகையிலும்,15 பிரதேச செயலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய நிர்வாக சபை அங்கத்தவர்களளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ. தர்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, மாவட்ட உளவளத்துணை அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட மகளிர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6