3தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர்கள் கழக சம்மேளனம் ஆகின இணைந்து ஏற்பாடு செய்த 35 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் 04.10.2025 அன்று 03.30 மணிக்கு நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜரத்ன மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஓட்டம், குண்டெறிதல், தட்டெறிதல், உதைபந்தாட்டம் ,கயிறுழுத்தல், உட்பட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதனையடுத்து, போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 1413 14