557951511 செவிப்புல வலுவற்றோர்கள் தொடர்பாடலில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் சைகை மொழியின் முக்கியத்துவம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கான வழிப்புணர்வு பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.10.2025) மாலை 2.30 மணிக்கு யாழப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், செவிப்புல வலுவற்றோர்கள் தொடர்பாடலின் போது சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் இக்கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூகத்தில் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் அவர்கள் செயற்பட வேண்டும், அந்தவகையில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் முழுமையான ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் பலர் இந்த சைகை மொழி தொடர்பான பயற்சியை கடந்த காலங்களில் பெற்றுள்ளதாகவும் அதேபோல் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்த பயிற்சியினை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் செவிப்புல வலுவற்றோர்களின் கருத்துக்களை புரிந்து வினைத்திறனான சேவைகளை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.மேலும், எந்த வகையிலும் இதனைக் குறைபாடாக கருதி அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் நாம் எல்லோரும் மனிதர்கள், தேவைகளின் அடிப்படையிலே கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், எந்தவித வேறுபாடும் அற்ற வகையில் உங்களோடு கடமையாற்றவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்ஷினி, இலங்கை தமிழ் செவிப்புல வலுவற்றோர் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் திரு.ப.கேதீஸ்வரன், தமிழ் செவிப்புல வலுவற்றோர் அமைப்பின் பணிப்பாளர் திரு.சே.செல்வக்குமார், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செவிப்புல வலுவற்றோர் சங்கத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6 7 8 9 11 13 14 15 17 19 20 557951511