9சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் இணைந்து நடைமுறைப்படுத்திவரும் மாற்றுத்திறன் நபர்களுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் கீ‌ழ் மாகாண மட்டத்திலான விருது வழங்கும் நிகழ்வு 14.10.2025 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் ஹொட்டலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் மற்றும் JICA நிறுவன அதிதி திரு. Saimizu Thakasi ஆகியோர் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இத் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேடுப்பதற்கு பங்களிப்பு செய்துவரும் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறன் நபர்கள், தொழில் வழங்குனர்கள், பயனாளிகள், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
மேலும், வெற்றிகரமாக தொழில் வாய்ப்பினை பெற்றுள்ள 58 மாற்றுத்திறன் நபர்களில் 45 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள்,உதவிப் பிரதேச செயலாளர்கள், சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் JICA நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17