1சிறுவர், பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகளால் (SGBA) பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (30.10.2025 ) YMCA மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் பெண்கள் தொடர்பான பால்நிலைசார் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இவ்வன்முறை செயற்பாடுகளை இலகுவாக வெளிக்கொணர்வதற்காக கிராம மட்டத்தில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதன் மூலமாக வன்முறைகளை வெளிக்கொணர வேண்டுமெனவும், அத்துடன் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் அவசர சேவை வழங்குதல் தொடர்பான இப்பயிற்சி பட்டறை மூலமாக வன்முறைகளை இலகுவாக கையாளக்கூடிய திறனை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இப் பயிற்ச்சி பட்டறை இன்றும் (30.10.2025) நாளையும் (31.10.2025) ஆகிய இரு தினங்களும் முழுநேர பயிற்சியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிலிருந்து பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி விசாகா விக்கிரம ஆராச்சி, திருமதி டேவிகா நாகவத்தா, திருமதி ஜனகா பல்லப்பிடடியா, வளவாளராக வைத்தியர் கரிச்சந்திரா ஜகண்டவல, மொழிபெயர்ப்பாளர் திருமதி ஜெனி கிளிநொச்சி மாவட்ட, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், யாழ் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,உளவளத்துணை உத்தியோகத்தர்,பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 8 10 12 15 14 17