13மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில்கடந்த வாரம் கொழும்பு- பத்தரமுல்ல தனியார் விடுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆயிரம் இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான 4ஐ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்ட இளம் தொழில்முனைவோருக்கான சான்றுக் கடிதங்களை இளம் தொழில் முனைவோருக்கு வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) பிற்பகல் 2.45 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கு சான்றுக் கடிதங்களை வழங்கி கௌரவித்தார். இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் ஆயிரம் இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டமான 4 ஐ அனைத்து தொழில்முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயற்படக் கூடியதாக நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்வதன் அவசியத்தினை விபரித்து, இளம் தொழில் முனைவோருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் (2025 - 2028 வரை) தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தேசிய 4 ஐ திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக 26 நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவிப்பணிப்பாளர்,தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட இணைப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி சபை வடக்கு மாகாண பணிப்பாளர், தொழில்துறை திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்,உற்பத்தி திறன் செயற்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர், சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட தொழில் முனைவோர்,மாவட்ட செயலக, பிரதேச செயலக உற்பத்திதிறன் செயற்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15 16