யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் நான்காம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பா.ஜெயகரன் (காணி) அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.12.2025) பி.ப 2.30 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், பெற்றோரை இழந்த சிறுவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள், பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், சிறுவர் தொடர்பான பிரதேச மட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இக்கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர்கள் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், நன்னடத்தை அலுவலர்கள் மாவட்ட, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உளவள துணை இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






