மாலைதீவில் எதிர்வரும் 18.06.2026 ஆம் திகதி தொடக்கம் 20.06.2026 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள South Asia Speed Skating Championship (ஸ்கேற்றிங் விரைவோட்டம்) போட்டியில் Dreamer United Sports Academy சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு மாணவியாக - சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆண்டு 09 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி ஷாருதி தர்மரூபன் அவர்கள் பங்குபற்றவுள்ளார். இதனையொட்டி இன்றைய தினம் (12.06.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மாணவி சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதன் போது போட்டியின் விபரங்களை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பங்குபற்றுவது குறித்து தமது மகிழ்ச்சியினைத் தெரிவித்ததுடன், போட்டியில் வெற்றி பெற தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச் சந்திப்பில் மாவட்டச் விளையாட்டு உத்தியோகத்தர் திரு. கே.விஜிதரன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அநுரகாந்தன், டிறிபேக் கல்லூரி ஆசிரியர் திரு. எஸ்.ஜெபநேசன், மாணவியின் தாயார் திருமதி சிவசங்கரி தர்மரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4