யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.






