வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (22.09.2026) காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் அவர்களும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கிருஸ்ணானந்தன் மாலினி, காரைநகர் கிராமியக் கலை இளங்கலைஞர் திரு. சற்குணநாதன் சத்தியராஜ் மற்றும் காரைநகர் நாடகத்துறை முதுகலைஞர் திரு. திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் :
கலை ஆற்றுகைகளுடன் ஆரம்பமான விழா விழாவின் ஆரம்ப நிகழ்வாக காரைநகர் பிரதேசத்தின் பல்வேறு கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிரதேச கலைஞர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. கலாசார பேரவைப் பொருளாளர் தி. பிரபாகரன் அவர்களால் “கதிரமலை அருமைநாயகம் அரங்கு” அரங்கத் திறப்புரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் குழு இசை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளர் திரு. பா. முகுந்தன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. ஒரே அரங்கில் பல்வேறு கலை வடிவங்கள் பண்பாட்டுப் பெருவிழாவில் காரைநகர் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தி நடனக் கலை மன்ற கலைஞர்களின் பக்திப் பாடல்கள், கலைஞர் சி. பிரசாந்தன் அவர்களின் நாட்டிய நிருத்தியம், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கிராமியப் பாடல்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிராமியக் கதம்பம் மற்றும் தெய்வீக கானங்கள் ஆகியன சிறப்பாக இடம்பெற்றன. மேலும், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் ஒயிலாட்டம் மற்றும் குழு இசை நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து “வாத்திய சங்கமம்” எனும் இசை நிகழ்வை திருநாவுக்கரசு நுண்கலை மன்ற மாணவர்கள் வழங்கினர். இறுதியாக இலவசக் கல்வி இளையோர் அமைப்பின் மாணவர்களால் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கலைஞர்களுக்கு “கலைஞானச்சுடர்” விருதும் “கலைமுகை” விருதும் விழாவின் முக்கிய நிகழ்வாக, காரைநகர் பிரதேசத்தின் கலைத்துறைக்கு நீண்டகாலமாக ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைத்துறையில் தமது நீண்டகாலப் பணியினூடாக பிரதேசத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களை அடையாளப்படுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான “கலைஞானச்சுடர்” விருதுகளும் “கலைமுகை” விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இக்கௌரவிப்பு நிகழ்வு கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது. வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் இதனுடன், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் நிறைவாக காரைநகர் கலாசார உத்தியோகத்தரால் நன்றியுரை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
5 6 7 8 9 10 11 12 13 16 18 20 21 22 23 24 2627 28 29
30 31 33 35 36 37 38 39 40 41