அகில இலங்கை கம்பன் கழகத்தினால் நடாத்தப்பட்ட கம்பன் விழாவின் மூன்றாம் நாள் இறுதி நிகழ்வுகள் நேற்றைய தினம் (01.11.2026) மாலை 04.00 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்கா தேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.
தலைமை :
இந் நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மங்கல இசை :
திரு. கே. கே. நாகதீபன் குழுவினர், திரு. பஞ்சமூர்த்தி குமரன் குழுவினர் மற்றும் திரு. தட்சணாமூர்த்தி உதயசங்கர் குழுவினர் மங்கள இசை நிகழ்வுகளை வழங்கினர்.
மங்கல விளக்கேற்றல் :
‘உதயன்’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான திரு. ஈ. சரவணபவன் அவர்களும் அவரது துணைவியாரும் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
கடவுள் வாழ்த்து :
திரு. ஜெ. மதுஷிகன் அவர்களின் கடவுள் வாழ்த்து இடம்பெற்றது.
தொடக்கவுரை :
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கௌரவ துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
வழக்காடு மன்றம் மற்றும் நாடக அரங்கு :
கம்பவாரிதி ’ இ. ஜெயராஜ் அவர்கள் நீதியரசராகத் தலைமையேற்று “இடித்துரைக்கத் தவறி அழிவுப்பட்டவர்கள் குற்றவாளிகள்!” என்ற தலைப்பிலான வழக்காடு மன்றமும், வாழ்நாள் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா இணைப்பாளராகப் பங்கேற்ற ‘நீயா? நானா?’ என்ற பொருளில் நாடக அரங்கும் சிறப்பாக இடம்பெற்றன.







