7SSSow1

லங்கை சமூக பாதுகாப்பு சபையின் சௌபாக்கியா நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (07) காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், சமுர்த்தி பணிப்பாளர், சமுர்த்தி திணைக்கள கணக்காளர், சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டதோடு, தற்போதைய கொவிட் 19 சூழ்நிலையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர், பொதுமுகாமையாளர், பிரதி உதவி முகாமையாளர்கள், வடக்கு - கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகளும் ZOOM செயலி ஊடாக பங்குபற்றியிருந்தார்கள்.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்புசபையின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 2020 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தகுதிபெற்ற 119 மாணவர்களில் எழுமாறாக எட்டு மாணவர்களிற்கு புலமைப்பரிசிலிற்கான காசோலை மற்றும் பரிசில் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
7SSSow5  7SSSow1  7SSSow2