15vanivizha1யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக வாணி விழாவானது மாவட்டச் செயலக நலன்புரிக்கழக தலைவர்திருமதி .செ.நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை 11 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகின்ற போது " கல்வி,செல்வம், வீரம் ஆகிய மூன்றும் எமது வாழ்க்கையில் மிக முக்கியமானது ஆகும். கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முத்தேவிகளையும் சமமாக வழிபட்டு எமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும்" எனத் தெரிவித்தார்.
 
மேலும், இந் நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் திரு.கு.பாலசண்முகன் அவர்கள் "வல்லமை தாராயோ" என்ற தலைப்பின் கீழ் சிறப்புச் சொற்பொழிவாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் சுகாதாரவிதிமுறைகளுக்கு அமைய கலந்துகொண்டிருந்தனர்.
 
 15vanivizha1  15vanivizha5  15vanivizha2
15vanivizha3  15vanivizha4