ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி அவர்களும் அவரின் அதிகாரிகளும் யாழ்மாவட்ட செயலகத்திற்கு 23.11.2021 அன்று விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.
குறித்த சந்திப்பில் உலக உணவுத்திட்டத்தினால் யாழ்மாவட்டத்தில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக உணவுப் பாதுகாப்பு,போஷாக்கு குறைபாடு, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டம் மற்றும் ஜீவனோபாயத்திட்டங்கள் என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






