மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு சிறந்த அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன் தலைமையில் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் 29.11.2021 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு நட்புறவான களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், மேதிக அரசாங்க அதிபர்,உதவி மாவட்டச் செயலாளர்,பிரதமகணக்காளர், மற்றும் கணக்காளர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், மாவட்டச் செயலக உற்பத்தித்திறன் தொடர்பான முறைமைகளையும்,புத்தாக்க நடைமுறைகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.