2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (03.01.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்னறில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி தேசிய ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மங்கல விளக்கேற்றலுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் Covid 19 பாதுகாப்பு தொடர்பான சிறப்புரையை நல்லூர் சுகாதார வைத்தியகலாநிதி க. ஜெயக்குமார் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
 
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் " அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளைப் பிரகடனத்தின்" சிறப்புரை இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் போட்டியில் முதலாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றமைக்கு அந்த வெற்றியை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், தொடர்ச்சியான இந்நிலையை தக்கவைக்க வைக்க மக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையை வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.மேலும் தொடர்ந்து இவ்விடத்தை தக்க வைப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் போட்டியில் முதலாவது இடத்தை பெற்றமைக்காக மாவட்ட செயலகத்தில் வினைத்திறனுடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான மெச்சுரை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
மேலும் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஓய்வூதிய நடைமுறைப்படுத்தல் பயனாளிகளை இணைத்துக் கொள்ளல் அடிப்படையிலும், நிதிசேகரிப்பு அடிப்படையிலும் மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட இணைப்பு அதிகாரி பா.பிரதீபன் அவர்களால் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் இன்றைய நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.
 
03jan