19lang2தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் இணைந்து சிங்கள டிப்ளோமா கற்கைநெறியை கற்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில் 19.01.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் ஆர் ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டதோடு,கற்கை மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் திருமதி ஜே.பாலரஞ்சனி மற்றும் நில்மா லிசாந்தினி ரஞ்சனி, வட மாகாண இணைப்பாளர் பாலகிருஸ்ணா சிவ அஸ்வின், மாவட்டச் செயலக இணைப்பாளர் ந. உமாநாத், வளவாளர்கள் மற்றும் பயிலுநர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த வருடம் நூறு மணித்தியாலம் , நூற்றியம்பது மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கை உத்தியோகத்தர்களிற்கு கற்பிக்கப்பட்டது. இன்றைய தினம் டிப்ளோமா கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இக்கற்கைநெறியை கற்று உங்களை வளப்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த காலங்களில் கற்பித்த சிறந்த வளவாளர்கள் உங்களுக்கு கற்பிக்கவுள்ளார்கள். எனவே இச் சிங்கள டிப்ளோமா கற்கைநெறியை கற்பதனூடாக உங்கள் சேவைகளை சிறப்புற மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது " சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் நோக்கம், இக் கற்கையை கற்பதனால் நீங்கள் இன்னொரு மனிதனிற்கு சமம் எனக் குறிப்பிட்டதோடு, இம் மொழியை கற்பதன் மூலம் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் உருவாக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
 
19lang1 19lang3 19lang4