21health2யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.01.2022 அன்று பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல்,டெங்கு நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு ஆகிய மூன்றுவிடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ,2022 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 122 டெங்கு தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவானது எதிர்வரும் திங்கட்கிழமை நேரடியா களங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா நோயின் தாக்கம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டிள்ளதாகவும், கடந்த வாரம் நான்கு பேர் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இவர்கள் நான்கு பேரும் ஆபிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்களாக இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனவே இலங்கை 2012 ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனதால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அந்நிலையை தக்க வைக்க அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமென தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கொவிட் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட சுகாதார சேவை மற்றும் ஏனைய அரச சேவைகள், அரசார்பற்ற நிறுவனங்களை
சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்வரும் 31 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளதாக தெரிவித்தார் .மேலும் இவற்றுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனவும் அதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர்,பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,சுகாதார துறைசார் அதிகாரிகள்,இராணுவ அதிகாரிகள்,பொலீஸ் தரப்பினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 21health1 21health3 21health4