நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்ப நிகழ்வு
  
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் (29.01.2022) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நீதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சட்டத்தரணியுமான கௌரவ M.U.M.அலி சப்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றதோடு, இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா மற்றும் நீதியமைச்சின் செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இந் நடமாடும் சேவையானது நேற்றும், இன்றும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்நடமாடும் சேவையில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், ஆட்பதிவு திணைக்களம், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தலைமை பதிவாளர் திணைக்களம்,கடன் இணக்க சபை திணைக்களம்,சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம்,தேசிய புனர்வாழ்வு பணிப்பக தகவல் மையம்,மாகாண காணி நிர்வாகத் திணைக்களம்,மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம்,பனை அபிவிருத்தி சபை, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு,இலங்கை தொழிற்பயிற்சி ஆணையகம் உள்ளிட்ட நீதி அமைச்சின் கீழுள்ள அனைத்து அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினம் சமாதான நீதவான், திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
 
 29mrngstart2 29mrngstart3 29mrngstart1 29mrngstart4
 
"நீதிக்கான அணுகல்" நடமாடும் சேவை தொடர்பாக யாழ். மாவட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடல்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நீதித்துறை சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (29.01.2022) பிற்பகல் 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நீதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சட்டத்தரணியுமான கௌரவ M.U.M அலி சப்ரி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ
அங்கஜன் இராமநாதன், நீதி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்ன, வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மக்களின் பாவனைக்கு விடுவிக்கப்படாத காணிகள், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை அபிவிருத்தி செயற்திட்டங்களிற்காக விடுவித்தல், வனநில பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், காணிப்பதிவேட்டில் அழிவடைந்த காணி பத்திரங்கள் தொடர்பான விடயங்கள், மக்கள் குடியேறாத பகுதிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் நீண்ட காலம் வாழ்பவர்களுக்கு அதற்கான சட்டபூர்வ ஆவணங்களை வழங்குதல், பலாலி விமான நிலைய விரிவாக்குதலுக்கான காணிகளுக்கான இழப்பீடு வழங்குதல், கரையோர நில பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனையுடன் சம்மந்தப்படுகின்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கு புனர்வாழ்வு மையத்தை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
 
29evediss1 29evediss2 29evediss3
 
விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம்
 
"நீதிக்கான அணுகல்" எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக, யாழ்.மாவட்ட அரச அலுவலர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (30.01.2022) காலை 9 மணிக்கு வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, நீதி அமைச்சின் பிரதிநிதியும் உதவிச் செயலாளர் (சட்டம்) செல்வி. ரூவானாட் கினிகுறுப்பு, பிராந்திய இணைப்பாளர் றஸ்ணா முபாரத் மற்றும் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் இராமநாதன் சிவரூபன், உள்ளகக் கணக்காய்வாளர் கந்தசாமி கமலரூபன் மற்றும் வளவாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட அரச அலுவலர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தில் சமுதாயஞ் சீர்திருத்த திணைக்களம், சட்ட உதவி ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு அதிகாரசபை, கடன் நிவாரண சபைகள் திணைக்களம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ஆகிய நிறுவனங்களின் கருத்தமர்வுகளும் நடைபெற்றன
 
30awareness4 30awareness5 30awareness3
 
30awareness1 30awareness2