31Un1யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு 31.01.2021 காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் Mr.Robert Juham அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தின் சமகால அபிவிருத்தி , சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி கேட்டறிந்ததுடன்,மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தற்போதுள்ள நிலைமைகள் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.31un2