சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, சமுர்த்தி குடும்ப வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்ச்சிதிட்டத்தின் சுற்றுலாத்துறை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும், நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு.ரி.விஸ்வரூபன், சிரேஸ்ட முகாமையாளர் திரு.ஏ.ரகுநாதன், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






