9infra2யாழ்ப்பாண மாவட்ட உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஒரு மில்லியன் வீட்டுத்திட்டம், 0.6 மில்லியன் வீட்டுத்திட்டம், மலசலகூடம் அமைத்தல், நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசித்த காணி கொள்வனவு செய்யப்பட்ட மக்களது தற்காலிக வீட்டினை கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கு மாற்றுதல், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், சௌபாக்கியா அபிவிருத்தித்திட்டம், மீன்பிடி அபிவிருத்தித் திட்டம், கிராமிய மற்றும் பாரம்பரிய கிராமிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்டச் செயலக கணக்காளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 9infra3 9infra1 9infra4