தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சிறுவர் பாதுகாப்புத் திட்டம் தயாரித்தல்” தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11) காலை 9.30- மாலை 4.00 மணி வரை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது வடமாகாணத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்றதோடு,இதில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இனங்கண்டு அப்பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டதோடு, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






