பாரம்பரியமற்ற தொழிற்பயிற்சி சான்றிதழ்தாரர்களுக்கு தொழிலினை ஆரம்பிப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தொழிற் பயிற்சித்துறையில் பாரம்பரியமற்ற கற்கை நெறிகளை பயின்ற தேசிய தராதர தகைமை (NVQ)சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான OXFAM ம் இணைந்து 11 பயனாளிகளுக்கு அவர்களின் தொழிலை ஆரம்பிப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சின் பிரதிநிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், OXFAM நிறுவனத்தின் வடமாகாண பிரதிநிதி மற்றும் யாழ்.மாவட்டத்தின் தொழிற்பயிற்சி நிறுவனங்களின பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்






